வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதி கதிர்குளம் மகளிர் பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் கறவை மாடு வேண்டி இந்தியன் பேங்கில் கடந்த நான்காண்டுகளாக லோன் கேட்டு பல போராட்டங்கள் நடத்தினர்.
இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் கதிர்குளம் கிராமத்திற்கு நேரில் சென்று விசாரித்து அனைவருக்கும் லோன் வழங்கும்படி பரிந்துரைத்தார்.

இதனால் 58 பேரில் 48 பேருக்கு லோன் கிடைத்தது. எனவே மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அவருக்கு சால்வை மற்றும் கேடயத்தை மகளிர் பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் வழங்கினர். உடன் இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் இராசி தலித் குமார் மற்றும்CR. சின்னப்பதாஸ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment