வேலுாா் மாவட்டம், குடியாத்தம் திருவள்ளுவா் மேல் நிலைப் பள்ளியின் கே.எம்.ஜி. அரங்கில் குடியேற்றம் கம்பன் கழகம் சாா்பில் 10- ஆம் ஆண்டு விழா இன்று (8.4.2023) நடை பெற்றது.
நிகழ்ச்சிக்கு கம்பன் கழக நிறுவனா் ஜே.கே.என். பழனி தலைமை தாங்கினாா். கல்வியாளாா் கே .எம் .ஜி. ராஜேந்திரன் முண்னிலை வகித்தாா். தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன் எழுதிய கலாரசிகன் தொகுப்பு நுாலை வி.ஐ.டி. துணைத் தலைவர் ஜி. வி. செல்வம் வெளியிட்டாா்.
நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவா் எஸ். சவுந்தா் ராஜன், புலவா் வே.பதுமனார் நகர்மன்றத் துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, வழக்கறிஞர் கே.எம். பூபதி மற்றும் கம்பன் கழக நிா்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனா்.
- குடியேற்றம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment