இன்றைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் சுமதி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் ஆர். எஸ்.அஜிஸ்குமார் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் பெ.இளங்கோ தமிழக தமிழாசிரியர் கழக மாநில துணைத்தலைவர் வாரா தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழக மாவட்ட நிர்வாகி கிருஷ்ணன் தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் சங்க மகளிர் அணி செயலாளர் ஜி. சுந்தர லட்சுமி உள்பட பலர் பேசினர் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

- திருச்சியில் நடைபெற்ற மாநில உயர்மட்ட குழுவின் முடிவின்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
- 11.04.2023 அன்று சென்னை கோட்டை முற்றுகை போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது என்றும் வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் போராடுகின்ற ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் செ.நா.ஜனார்த்தனன், அ.சேகர் ஆகியோர் கூறியதாவது.. தமிழ்நாடு அரசின் கவனத்தினை ஈர்த்திட கோரி கடந்த ஒரு வருடமாக பல கட்ட அறவழி போராட்டங்களை நடத்தியுள்ளோம். மேலும் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டினை நடத்தினோம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று பேசினார். ஜனவரி மாதம் ஆர்ப்பட்டம், பிப்ரவரி மாதம் உண்ணாவிரதம் மார்ச் மாதம் மனித சங்கிலி போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினோம் ஆயினும் இது வரை தமிழ்நாடு முதலமைச்சர் எங்களை அழைத்து பேசவில்லை எனவே அரசின் கவனத்தினை ஈர்க்கவும் அரசு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உயர்மட்டகுழு உறுப்பினர்களை அழைத்து பேசி கோரிக்களை நிறைவேற்றிட வேண்டுகின்றோம்.
கோரிக்கைகள்

- பங்கேற்பு புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
- அகவிலைப்படி 4%சதவீதம் கடந்த 1.7.2022முதல் வழங்கிட வேண்டும். 3.சரண்விடுப்பு தடை ஆணையை ரத்து செய்து சரண்விடுப்பு சம்பளம் பெற தமிழக அரசு உத்தரவு வழங்க வேண்டும். .
- வெளிமுகமை (Outsourcing) முறையில் அத்து கூலிகளாக தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் தற்காலிகமாக அரசாணை எண்.115;139;152ன்படி நியமனம் செய்வதை ரத்து செய்து தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 6லட்சம் பணி இடங்களை உடனடி யாக நிரப்பிட வேண்டும்.
- தொகுப்பு ஊதியம், சிறப்புஊதியம், மதிப்பூதியம் போன்றவற்றில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர்க்கு கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும்
- இடைநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்.
- மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் அரசு துறையில் பணி புரியும் ஊழியர்களை அத்துக்கூலிகளாக மாற்றும் அரசாணை 115, 139, 152 ரத்து செய்ய வேண்டும்.
- அதே போல் இளைஞர்களின் வேலை வாய்ப்பை கேள்விக் குறியாக்கும் அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும்
உள்ளிட்ட 15அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.
- வேலூர் தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.
No comments:
Post a Comment