வேலுாா் மாவட்டம குடியாத்தம் புரட்சி கவிஞர் பாரதிதாசன் பேரவை சாா்பா்க 133 வது பிறந்தநாள் விழா லிட்டில் பிளவா் பள்ளி பெரியாா் கலையரங்கில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு மு நகர மன்ற தலைவரும் நகர மன்ற உறுப்பினா் புவியரசி தலைமை தாங்கினாா்.

பேரவையின் அமைப்பாளா் வி.சடகோபன் துவக்க உரையாற்றினார். பேரவை செயலாளர் கவிஞர் தூயவன் வி ஏ அன்பு வரவேற்பு உரை ஆற்றினார். வாழ்த்துறையாளர்கள் ஆசிரியர் தமிழ்ச்செல்வன், பி தனபால், பூமாலை வாசு, முத்துக்குமரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள், சிறப்பு விருந்தினராக குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி அமுலு, நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
கவிஞர் பாரி எழுதிய வேர்களும் விழுதுகளும் நூலை வழக்கறிஞர் சம்பத்குமார் அறிமுகம் செய்தார் ந .ஜம்புலிங்கம் நன்றி உரையாற்றினார்.
- குடியேற்றம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment