வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் குறுகையில் திட்டம் ஐந்து கட்டிட தொகுப்புகள் கொண்டது ஒவ்வொரு கட்டிட தொகுப்பும் தரைத்தளம் மற்றும் 3 தளங்களைக் கொண்டது மின்சார வசதி குடிநீர் வசதி கழிவுநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடியிருப்பும் ரூபாய் 10 லட்சத்து 89 ஆயிரத்து மதிப்பில் கட்டப்பட்டுள்ளது பயணிகள் ரூபாய் 2 லட்சத்து 39 ஆயிரம் பங்களிப்பு தொகை செலுத்த வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உதவி கலெக்டர் கவிதா நிர்வாக பொறியாளர் பாலமுரளிதரன் உதவி நிர்வாக பொறியாளர் முருகதாசன் மண்டல குழு தலைவர் வெங்கடேசன் உதவி கமிஷனர் செந்தில்குமார் கவுன்சிலர் சங்கீத பாபு மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் மு பாக்கியராஜ்
No comments:
Post a Comment