மாவட்ட செயலாளர் டி.முனிசாமி வரவேற்று பேசினார். விஞ்ஞான துளிர் வெளியீடு 35 ஆண்டுகளாக தமிழ்நாடு அறிவியல் இயக்க துளிர் ஜந்தர் மந்தர் இதழ்களின் கட்டுரைத் தொகுப்புகளை சென்னை கணிதவியல் நிறுவனத்தின் 60ஆம் ஆண்டு விழாவினை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட அறிவியல் கட்டுரை தொகுப்பு விஞ்ஞான துளிர் மலரை மாநில பொதுச்செயலாளர் எஸ்.சுப்பிரமணி வெளியிட மாவட்ட செயலாளர் டி.முனிசாமி, துணைத்தலைவர்கள் கே.விசுவநாதன், செ.நா.ஜனார்த்தனன், கு.செந்தமிழ்செல்வன், கோபால இராசேந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
தமிழ்நாடு அரசின் சார்பில் ரஷ்யா செல்லும் ஆசிரியருக்கு பாராட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் செயற்கைக்கோள் தயாரிப்பு தளங்களுக்காக ரஷ்யாவுக்கு செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்க வேலூர் மாவட்ட இணைசெயலாளரும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு கருத்தாளரும் ஊசூர் அரசு மகளிர் பள்ளி பட்டதாரி ஆசிரியை கோடீஸ்வரி அவர்கள் ஆசிரியராகவும் கருத்தாளராகவும் பள்ளி மாணவர்களுடன் ரஷ்யா செல்ல இருப்பதினால் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாவட்டத்தின் அறிவொளி அறிவியல் இயக்கத்தின் முன்னோடியும் அறிவியல் இயற்கை விஞ்ஞானியுமான கே.செந்தமிழ்செல்வன் கருத்துரை ஆற்றினார். மாநில பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியபோது கூறியதாவது.. இப்போது அறிவியல் இயக்கத்தில் புதுமையும் பழமையும் சேர்ந்ததே என்ன என்பதை புரிந்து கொள்கின்ற பக்குவம் அமைப்பு சார்ந்த பயிற்சி, திறன் சார்ந்த பயிற்சி, இரண்டிற்கும் வேறுபாடு முறைகளை கண்டறிவது அறிவியல் திருவிழாக்கள் நடத்துவது சுற்றுச்சூழல் அமைப்புடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றார்.

மாநில வெண்புள்ளி ஒழிப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து செய்வது மற்றும் மாணவர்களிடையே மறைந்து கிடக்கும் தனி திறமைகளை வளர்த்தெடுப்பது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார். மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் டி.முனுசாமி கடந்த ஓராண்டு அறிவியல் இயக்க செயல்பாடுகளை அறிக்கையாக தொகுத்து அறிக்கையை வாசித்தார்.
மாவட்ட பொருளாளர் மஸ்தான் பொருளாளர் அறிக்கையை சமர்பித்து பேசினார். அபிராமி கல்லூரி நிர்வாக அலுவலர் முருகவேல் வாழ்த்தி பேசினார். மேலும் வானவில் மன்ற கருத்தாளர்கள் புதியதாக வந்திருக்கின்றவர்கள் அரசு அறிவிக்கின்ற அடுத்த நிலைப்பாட்டில் 50 கருத்தாளர்களை உடனடியாக மாவட்டத்தில் தலைப்பு வாரியாக உருவாக்க முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினரும் திரு பி ராஜேந்திரன் கோரிக்கை வைத்ததற்கு உடனடியாக மாவட்ட குழு கூட்டத்தை கூட்டி இதற்கான சரியான தீர்வை எடுத்து 50 கருத்தாளர்களை முதலில் களத்தில் இறக்க அவர் கோரிக்கை வைத்தார் இந்த கருத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டு சிறப்பு செய்தனர்.
இக்கூட்டத்தில் ஓய்வுபெற்ற மாவட்ட தொடக்க்கல்வி அலுவலர் கோபால இராசேந்திரன், மாவட்ட துணை தலைவர் வி. குமரன், மாவட்ட இணை செயலாளர்கள் என்.கோடீஸ்வரி எ.பாஸ்கர் கே வி குப்பம் ஒன்றிய தலைவர் டாக்டர் கணேசன், ஒன்றிய வேப்பூர் கிளைச் செயலர் ஜெ.ஞானப்பிரகாசம் வானவில் மன்ற கருத்தாளர்கள் சா.வினோத், ஆர்.டார்வின், எஸ்.சரளா, ஆர் ஜெகன் மாவட்ட குழு உறுப்பினர் மணிகண்டன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பி.ராமு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பி.ராஜேந்திரன் எம் ரவிச்சந்திரன் பொது ஆகியோர் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்
- வானவியல் மன்ற கூட்டங்கள் நடக்கும் பொழுது பல தொண்டு நிறுவனங்கள் இணைந்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது அதற்கு ஏற்றபடி நாம் திட்டமிட்டு செயல்படுத்த முடிவெடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- துளிர் வினாடி வினா ஜந்தர் மந்தர் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து நடத்துவது என்றும் துளிர் இல்லம் உருவாக்குவது உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
- கல்லூரிகளில் அறிவியல் இயக்கத்தின் கிளை அமைத்தல் மேலும் இரண்டாவது கட்டமாக 150 கருத்தாளர்களை உருவாக்குவது அடுத்து 50 தன்னார்வலர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி அளித்தல் கோடை விழாக்கள் நடத்துதல் ஊராட்சி அளவில் கோடை விழாக்கள் நடத்துதல் என தீர்மானிக்கப்பட்டது.
முடிவில் மாவட்ட பொருளாளர் திரு மஸ்தான் அவர்கள் நன்றி கூறினார்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் மு .பாக்கியராஜ்
No comments:
Post a Comment