இதில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடி, குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தி பிரிட்ஜ் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் Dr. T. மதிவாணன், MSW அனைவரையும் வரவேற்றார்.
இதில் மாணவர்கள் அனைவரும் சிலம்ப கலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழர் கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்றார், பெண்களுக்கு சிலம்ப கலை கற்று தங்கள் பாதுகாப்பிற்காக பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்டம் மாமன்ற உறுப்பினர் 53 வது வார்டு மாநகராட்சி பாபி கதிரவன், கலந்து கொண்டு மாணவர்கள் அனைவரும் நம் தமிழ் கலைகளை கற்று அதனை பாதுகாக்கவேண்டும் என்றார். மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறினார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து சாதனை புரிய சிலம்ப ஆசான்கள் தங்கள் மாணவர்களை அழைத்துவந்தனர், சுமார் 350 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் 20 நிமிடம் 23 நொடிகள் தொடர்ந்து நம் வேலூர் வெயிலில் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர். இதற்கான சான்றுகளை வேலூர் மாவட்டம் மாமன்ற உறுப்பினர் 53 வது வார்டு மாநகராட்சி திருமதி. பாபி கதிரவன் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு மாநில ஒருங்கிணைப்பாளர் மு .பாக்கியராஜ் மற்றும் அச்சம் தவிர் பவுண்டேஷன் நிறுவன தலைவருமான ஜெய் ஸ்ரீ தேவி சம்பத், வழக்கறிஞர் அவர்கள் நன்றியுரை கூறினார், பின்னர் தேசிய கீதம் பாடி நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
- வேலூர் தலைமை செய்தியாளர் மு.பாக்கியராஜ்
No comments:
Post a Comment