சென்னை இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பாக குடியாத்தம் மற்றும் அணைக்கட்டு மருத்துவமனைகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 26 April 2023

சென்னை இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பாக குடியாத்தம் மற்றும் அணைக்கட்டு மருத்துவமனைகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சென்னை எல்பிஜிடிவிஷன் சிஎஸ்ஆர் மூலம் குடியாத்தம் ₹25லட்சம்  அணைக்கட்டு ₹10 லட்சம் என்று மருத்துவமனைகளுக்கு தானியங்கி ரத்த பரிசோதனை இயந்திரம் மற்றும் மயக்க மருந்து சிகிச்சை அளிக்கும் இயந்திரம், இதய பரிசோதனை கருவி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் மொத்தம் ₹35 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தென் மண்டல எல்பிஜி கேஸ் பொது மேலாளர் ராகேஷ்குப்தா அவர்கள் தலைமை தாங்கினார் மருத்துவமனைகளுக்கு சென்னை மண்டல அலுவலர் பிட்ட பாஸ் சாரங்கி மற்றும் தென்மண்டல உதவி பொது மேலாளர்  சந்திர மோகன் ஆகியோர் மருத்துவ உபகரணங்களை  குடியாத்தம் தலைமை மருத்துவர் மாறன் பாபு மற்றும் அணைக்கட்டு தலைமை  மருத்துவர் பிரீத்தி ஆகியோரிடம் வழங்கினார்கள் மேலும் குடியாத்தம் அரசு மருத்துவமனை  உள்நோயாளிகளுக்கு  எல்பிஜி நிறுவனத்தின் சார்பில் பழங்கள் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது .

நிகழ்ச்சியில் குடியாத்தம் பிரபல சர்க்கரை நோய் மருத்துவர் விஜயநாதன்  எல்பிஜி டீலர்கள் குடியாத்தம் பொன்னம்பலம் அதன் மேலாளர் சுஜாதா ஒடுகத்தூர்  ஜிஆர். ஏஜென்சிஸ்  பேர்ணாம்பட்டு டீலர் தண்டபாணி ஆம்பூர்  டீலர் செந்தில்குமார். குடியாத்தம் லயன்ஸ்சங்க நிர்வாகிகள் டாக்டர் வெங்கடேஸ்வரன்  ஏ.சுரேஷ்குமார் விவேகாநந்தம் கோல்டன்பாபு தில்லைநாதன் மருத்துவமனை ரத்த பரிசோதகர் மோகன்பிரபு மருத்துவர்கள்  மற்றும் ஊழியர்கள்  கலந்து கொண்டனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad