தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசை பாண்டி புரத்தை சேர்ந்த லூர்து பிரான்சிஸ் (வயது 56 )இவர் முற்ப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார் .இன்று காலை அவர் அலுவலகத்தில் பணியில் இருந்த போது சில மர்ம நபர்கள் திடீர் என்று அலுவலகத்திற்கு உள்ளே புகுந்து சரமாரியாக வெட்டி உள்ளார்கள் ரத்த வெள்ளத்தில் இருந்து அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து பலன் இன்றி உயிரிழந்தார்.

இதை கண்டித்து இன்று மாலை குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கோட்ட செயலாளர் வெங்கடாஜலபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, வட்டத் தலைவர் செந்தில் வட்ட செயலாளர் சசிகுமார் வட்ட பொருளாளர் காந்தி செந்தமிழ் செல்வன் பெரியசாமி உஷா சத்யவதி மற்றும் கிராம உதவியாளர் சங்கத்தை சேர்ந்த பிரகாசம் மணிகண்டன் பழனி சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு கிராம நிர்வாக அலுவலரை வெட்டி படுகொலை செய்த மணல் கடத்தல் நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment