வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன்ய ஆற்றுப்பகுதியில் சுமார் 70 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வசித்து வந்த வீடுகளை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கடந்த ஆண்டு இடித்து தரை மட்டமாக ஆக்கப்பட்டது .இதை அடுத்து குடியாத்தம் அடுத்த ராமமலை கிராமத்தில் சுமார் 200 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவும் அந்த இடங்களை அடையாளம் காட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நகர மன்ற உறுப்பினர் லாவண்யா குமரன் தலைமையில் சுமார் 35 குடும்பத்தினரை நேரில் அழைத்துச் சென்று பட்டா வழங்கும் இடத்தை அடையாளம் காட்டப்பட்டது.

மேலும் இப்பகுதியில் வீடு கட்டி வாழ வசதியாக சாலை வசதி மின்விளக்கு வசதி குடிநீர் வசதி போன்றவை ஏற்படுத்திக் கொடுக்க குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஒன்றிய பெருந்தலைவர் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோருக்கு அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை வைக்கப்பட்டது.
- குடியேற்றம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment