பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு வேலூர் மாநகராட்சியின் 1வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னிராஜா பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். அப்போது அவர் கூறியதாவது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு நல திட்டங்களை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. நீர்வளத்துறை அமைச்சர் அவர்களும் நம் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கல்வி வளர்ச்சிக்காக பணிகளை ஆற்றி வருகிறார். மாணவ மாணவிகள் பயிற்சி முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் மற்றும் காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனர், வேலூர் மாநகராட்சியின் 14 வார்டு மாமன்ற உறுப்பினர் சாமுண்டீஸ்வரிகுணாளன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். காட்பாடி வட்டார வள மைய கருத்தாளர்கள் லெனின், கலைமணி காட்பாடி ரெட்கிராஸ் அவை துணைத்தலைவர் ஆர்.விஜயகுமாரி, வட்ட செயலாளர் எம்.எஸ்.கெஜராஜ், மக்கள் சேவை சங்கத்தின் செயலாளர் பா.குணாளன், ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
ஆசிரியைகள் ரெனிதா, சத்யாதேவி, ஈஸ்வரி, லட்சுமி கவிதா, பானுமதி, அஞ்சலாட்சி ஜெயஶ்ரீ இல்லம் தேடி கல்வி திட்ட கருத்தாளர்கள் துர்கா, அலமேலு, கெசியா, சுபாஷினி, மாலதி, பார்க்கவி, ஜமுனா உள்ளிட்டோர் கலை நிகழ்சிகளை ஒருங்கிணைத்தனர். முடிவில் ஆசிரியை அஞ்சலாட்சி நன்றி கூறினார்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் மு.பாக்கியராஜ்.
No comments:
Post a Comment