ரெட்கிராஸ் சார்பில் தமிழ் புத்தாண்டு விழா மாமன்ற உறுப்பினர் டீட்டா சரவணன் பொங்கல் வழங்கினார். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 14 April 2023

ரெட்கிராஸ் சார்பில் தமிழ் புத்தாண்டு விழா மாமன்ற உறுப்பினர் டீட்டா சரவணன் பொங்கல் வழங்கினார்.


காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் சார்பில் தமிழ் புத்தாண்டு விழா 14.04.2023 காலை 10 மணி அளவில் காட்பாடி அருப்புமேடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெறது. இவ்விழாவிற்கு வேலூர் மாநகராட்சியின் வேலூர் மாநகராட்சியின் 12 வது வார்டு மாமன்ற உறுப்பினர் டீட்டா.சரவணன் பங்கேற்று சர்க்கரை பொங்கல் 1000 பேருக்கு வழங்கி துவக்கி வைத்தார். 

அவைத்தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். முன்னதாக செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு வரவேற்றுப் பேசினார். அவை துணைத் தலைவர் ஆர்.சீனிவாசன், ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசகர்  டி.வேணுகோபால் தலைமை ஆசிரியர் பழனி, ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் வேதக்கண் தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மேலாண்மை குழு உறுப்பினர்கள் கண் மருத்துவர் டாக்டர் தீனபந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆறுமுகம் எஸ்.ரமேஷ்குமார்ஜெயின், வி.காந்திலால் பட்டேல், ஆர்.லட்சுமிநாராயணன், மோகன், ராஜி, பாஸ்கர், சேட்டு உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.


பள்ளியின் ஜூனியர் ரெட் கிராஸ் மாணவ மாணவிகள் வரவேற்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் முடிவில் நடுநிலைப்பள்ளி ஆசிரியை பூங்குழலி நன்றி கூறினார். இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மாணவர்கள் என ஆயிரம் பேருக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது .


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்கியராஜ். 

No comments:

Post a Comment

Post Top Ad