வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் உள்ள கிட்ஸி மழலையர் பள்ளியின் ஆண்டு விழா, காந்திநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது பள்ளி நிறுவனர் டி.சீனிவாசன் அவர்கள் தலைமை தாங்கினார்.
தாளாளர் எஸ்.ரவீந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன்அவர்கள் தொழிலதிபர் ஜவுரிலால் ஜெயின் லயன்ஸ்கிளப் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்கே.பொன்னம்பலம் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி மழலை மாணவர்களுக்கு பட்டங்களையும் ஆண்டுவிழாவில் பங்கு கொண்டு கலைநிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மழலையர்களுக்கு பரிசுகளையும் வழங்கி சிறப்பித்தனர்.

ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் விஎச்பி நிர்வாகி ராமசரவணன் பள்ளியின் முதல்வர் நதியா தலைமை ஆசிரியர் சுதா பெற்றோர்கள் பள்ளி மாணவர்கள் ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment