குடியாத்தத்தை அடுத்த கீழ் செட்டிகுப்பம் கிராமத்தில் சென்னை நார் தொழிற்சாலை இயங்கி வருகிறது இங்கு பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் . தென்னை நார்த் தொழிற்சாலையில் எந்திரங்கள் அமைத்துள்ள பகுதியில் திடீரென தீ பற்றி அருகில் இருந்த தென்னை நாரிலும் தீ பரவியது இது குறித்து அப்ப பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் குடியாத்தம் தீ அணைப்பு நிலைய அலுவலக மகேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் .நாலபக்கமும் தீ பரவியது அதை அடுத்து பேர்ணாம்பட்டிலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் மு.பாக்கியராஜ்.
No comments:
Post a Comment