வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்வு நாள் இன்று நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் மு. வெங்கட்ராமன் தலைமை தாங்கினார் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கலைவாணி வரவேற்றார் இதில் பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலக உதவியாளர் விஜயகுமார் கல்லபாடி ஆரம்ப சுகாதாரா அலுவலா்கள் கண்ணன் பாபு பிரகாசம் சத்தியஜீவன் தொழுநோய் மற்றும் மாற்றுத் திறனாளி சங்க தலைவர் எஸ் டி ராஜன் ஆறுமுகம் அருண் வெங்கட் ஆகியோர் பங்கேற்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறோம் இன்று வரை நடவடிக்கை இல்லை தகுதி வாய்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக இலவச வீட்டு மனை பட்டா வழங்கவும் மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது அரசு வழங்கும் உதவித்தொகை ரூபாய் 1000 இருந்து 1500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் எா்க்ம்பட்டு கிராமத்தை சேர்ந்த செயல்பட முடியாத மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு அரசு உதவி தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டது. பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக வருவாய் கோட்டாட்சியர் உறுதி அளித்தார்.
- குடியேற்றம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment