வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் 243 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. தற்போது அதில் 72 நபர்கள் மட்டுமே வீடுகள் கட்டி வசித்து வருகிறார் மீதமுள்ள காலி இடத்தில் போலி பட்டாக்கள் தயார் செய்து ஆக்கிரமித்து உள்ளார்கள் இந்த பட்டாக்களை ரத்து செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டது.

பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாரதி மணவாளன் தலைமையில் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமையிடத்து துனை வட்டாச்சியா் ரகுராமன் அவர்களிடம் ஆட்சேபனை மனு அளிக்கப்பட்டது இதில் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் ஜெய்சங்கர் சரவணன் சிதம்பரம் ஆகியோர் உடன் இருந்தார்கள் மேலும் காலியாக உள்ள இடத்தில் பாக்கம் கிராமத்தில் உள்ள வீடு இல்லாத நபர்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும் என்று மனுவும் வழங்கப்பட்டது.
குடியேற்றம் தாலுகா செய்தியாளர்
கேவி ராஜேந்திரன்
No comments:
Post a Comment