கே வி குப்பம் வார சந்தையில் மண்பானை அமோக விற்பனை ஆடு வியாபாரம் மந்தம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 25 April 2023

கே வி குப்பம் வார சந்தையில் மண்பானை அமோக விற்பனை ஆடு வியாபாரம் மந்தம்.


கே வி குப்பம் வார சந்தை நேற்று நடைபெற்றது 200க்கும் குறைவான ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது அதிகபட்சமாக ஒரு ஆடு ரூ.22,000 வரை விலை போனது ஆடு வியாபாரம் மந்தமாக இருந்தது. மூங்கில் கூடைகள் ஆடு கோழிகள் கோழிகளை மூடி வைக்கும் ஜன்னல் வைத்த பெரிய கூடைகள் மரங்கள் அழகு சார்ந்த பொருட்கள் காய்கறிகள் பூக்கள் தானியங்கள் கிழங்கு பழம் வகைகள் விற்பனைக்கு இரவு 8 மணி வரை விற்பனை நடைபெற்றது.

கோடை காலத்தை முன்னிட்டு மண்பானை வாங்கி செல்வதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினர் 10 லிட்டர் முதல் 20 லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட பானை வார சந்தைக்கு வந்திருந்தனர் ரூ 150 ரூபாய் முதல் ரூ 300 ரூபாய் வரை விலை போனது பழங்கால பானைகளை விட குழாய்கள் பொருத்திய பானைகள் அதிக மவுசு இருந்து வருகிறது இதனால் கோடைகால குடிநீர் பயன்பாட்டுக்காக சந்தைக்கு வந்த உடனே குழாய் வைத்த பானைகள் விற்று விற்று தீர்ந்து விட்டன.


- கேவி குப்பம் தாலுகா செய்தியாளர் குபேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad