வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் இன்று மாலை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தோழர் காத்தவராயன் தலைமை தாங்கினார், தோழர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.

கண்டன உரை தோழர்கள் மாநில குழு தோழர் எஸ் டி சங்கரி மாவட்ட செயலாளர் சி பி எம் விடுதலை சிறுத்தை நகர செயலாளர் கே குமரேசன் இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் ராசி தலித் குமார் ஏகலைவன் அன்பரசன் விவசாய சங்க மாவட்ட செயலாளர் கே சாமிநாதன் பேரணாம்பட்டு தாலுகா செயலாளர் குடியாத்தம் தாலுகா செயலாளர் சிலம்பரசன் அனைத்து இந்திய மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ் குமாரி வாசுதேவன் நகர செயலாளர் கோடீஸ்வரன் ருத்ரவேல் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் கிருஷ்ணகிரியில் பட்டியலின பெண்ணை திருமணம் செய்ததற்காக தந்தையே தன் மகனை படுகொலை சமூக நீதி மண்ணில் தொடரும் சாதிய ஆணவ படுகொலைகளை தடுத்திட தமிழ்நாடு அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment