வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் கூட்டுறவுங்கில் இன்று விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டாட்சியர் எஸ் விஜயகுமார் தலைமை தாங்கினார். தலைமையிடத்து துனை வட்டாச்சியா் முன்னிலை வகித்தார் மற்றும் வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமா சங்கர் வருவாய் ஆய்வாளர்கள் மஞ்சுநாதன் பலராம பாஸ்கர் வட்ட வழங்க அலுவலர் ஜோதி ராமலிங்கம் சமூக பாதுகாப்பு திட்ட உதவியாளர் பிரகாசம் தோட்டக்கலை அலுவலர் தமிழரசி வட்டார வளர்ச்சி அலுவலர் வனத்துறை அலுவலர் நகராட்சி துறை போன்ற அரசு அதிகாரிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் விவசாயிகள் கூறியதாவது .

சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் பெரும்பாலான விவசாய நிலங்கள் சேதம் அடைந்தன ஆனால் சில பகுதிகள் மட்டுமே அதிகாரிகள் ஆய்வு ஆய்வு செய்தனர் பெரும்பாலான இடங்களை ஆய்வு செய்யவில்லை வனவிலங்குகளை வராமல் விரட்ட ஒலி எழுப்பு கருவி மின் வேலி அமைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவும் இது நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை செருவங்கி ஏரி பாசன வசதிக்காக மதகு திறந்த விட சொல்லி மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை கோடை காலங்களில் வனவிலங்கு காட்டில் உள்ள தொட்டியில் தொடர்ந்து தண்ணீர் நிரப்ப வேண்டுமென்ற விவசாயிகள் கோரிக்கை வைத்தனர் அனைத்தும் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் உறுதி கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment