இந்திய கம்யூனிஸ்ட்கட்சி 05.05.23 முதல் 10.05.23. வரை நாடு தழுவிய நடைபயண பிரச்சார இயக்கம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 5 May 2023

இந்திய கம்யூனிஸ்ட்கட்சி 05.05.23 முதல் 10.05.23. வரை நாடு தழுவிய நடைபயண பிரச்சார இயக்கம்.


குடியாத்தம் ஒன்றிய நகரக்குழு சார்பில் 03.குழுக்கள் 25.கிளைகள் 100.மையங்கள் வீதிகள் தோறும் வீடு வீடாக சென்று ஒரு லடசம் மக்களை சந்திப்பது பி ஜே பியை அகற்றுவோம், நாட்டையும் மக்களையும் காப்போம், சந்தித்து பிரச்சரம் செய்வது இன்று 05.05.23. செட்டிக்குப்பம் பகுதியில் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.லதா மு ச ம உ துவக்கி வைத்தார்.


இந்நிகழ்வில் மாவட்ட துணைசெயலாளர் துரைசெல்வம் ஒன்றிய நகர செயலாளர் டி.ஆனந்தன் துணைசெயலாளர் கே.சி.பிரேம்குமார், பொருளாளர் எஸ்.மகேஷ்பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முதல் குழு டி.ஆனந்தன் தலைமையில் காக்காதோப்பு பகுதியிலும்  இரண்டாவது குழு.கே.சி.பிரேம்குமார் தலைமையில் செட்டிகுப்பம் பகுதியிலும் மூன்றாவது குழு ஜி.தங்கவேலு தலைமையில் பெரும்பாடி பகுதியிலும் நடைபெற்றது.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad