வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நீர்மோர் தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு புரட்சித்தாய் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில தலைவர் சேர சோழ பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வெங்கடேசன் இளங்கோ நகர மகளிர் அணி செயலாளர் புனிதா ராணியம்மாள் முன்னிலையில் வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதி சட்டப்பேரவை கொறடா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், பி எம் நரசிம்மன் அவர்கள் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். தொழிலாளர் அணி தலைவர் விநாயகம் ஓட்டுரனி செயலாளர் ஏகாம்பரம் சீனிவாசன் மகேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு நீர் மோர் தர்பூசணி பழரசம் போன்ற குளிர்பானங்களை பொதுமக்கள் வழங்கினார்கள் முடிவில் புனிதா அவர்கள் நன்றி கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment