ரோட்டரி கிளப் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் கண் சிகிச்சை முகாம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 6 May 2023

ரோட்டரி கிளப் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் கண் சிகிச்சை முகாம்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி கிளப் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் கண் சிகிச்சை முகாம் ரோட்டரி கிளப் கட்டிடத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் தலைவர் எ. மேகராஜ் தலைமை தாங்கினார். 

இதில் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் சி.கே. வெங்கடேசன் ஆர்.வி .ஹரிகிருஷ்ணன் ஆர் .கே. மகாலிங்கம் கண்ணன் மதியழகன் வாசுதேவன் ரவிச்சந்திரன் வாசுதேவன் ஜம்புலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக கே எம் ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கே எம் ஜி ராஜேந்திரன் மற்றும் கே எம் பூபதி பங்கேற்றனர்.


கண் சம்பந்தமாக கண்களில் சதை வளர்தல் கண்களில் புறை நீக்குதல் கிட்ட பார்வை துவரப்பார்வை இவைகளை பரிசோதித்தனர் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் கொடையாளராக மு க  மெய்ஞானம் வசந்தியம்மாள்  அறகட்டளை  சாா்பாக முன்னாள் அரசு வழக்கறிஞர் கே எம் பூபதி ஏற்பாடு செய்திருந்தார்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad