வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு முத்தையர் மறுமலர்ச்சி சங்கத்தின் சார்பில் பேரரசர் பெரும்பிடுகு முத்தையாறையின் 1348 வது சதய விழாவை முன்னிட்டு மன்னரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் தலைவர் சுதாகரன் தலைமை தாங்கினார், பொதுச் செயலாளர் சதீஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் துணைச்செயலாளர் கணேசன் செயற்குழு உறுப்பினர் சண்முகம் கன்னியப்பன் மகளிர் அணி செயலாளர் தமிழ் ரசி பவணந்தி வழக்கறிஞர் செல்வகுமார் மற்றும் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் சமுதாயத்தினர் ஏராளமானவர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் அணைக்கட்டு நிவாஸ் நன்றி கூறினார். சத்துவாச்சாரி செதுவாலை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது
- வேலூர் மாவட்ட செய்தியாளர் மு.பாக்யராஜ்
No comments:
Post a Comment