வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி ஸ்ரீ கெங்கையம்மன் கோவில் திருவிழா இன்று நடைபெற்றது, கே மோட்டூர் கிராம பக்த கோடிகள் அம்மனுக்கு பரந்த மாலை அணிவித்தனர். கெங்கை அம்மன் சிரசு ஊர்வலம் முக்கிய சாலைகளில் சென்று பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது பிறகு கோவிலை சென்று அடைந்தது.


பகல் ஒரு மணிக்கு பக்தர்களுக்கு தரிசனம் வழங்கியும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் ஒன்றிய செயலாளர் கள்ளுா் ரவி கல்லபாடி தா்மகா்த்தா சரவணன் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் குமுதா தயாள் சங்கர் அன்பழகன் மற்றும் தக்காா் சங்கர் ஆய்வாளர் சபரி செயல் அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் ஊர் பெரியவர்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வான வேடிக்கைகள் அரவான் கடபலி என்னு தெருகூத்து நாட்கம் நடை பெற உள்ளது, எழு ஊர் பெரிதான காரர்கள் பக்தர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
No comments:
Post a Comment