கூட்டத்திற்க்கு வருவாய் கோட்டாச்சியா் மு வெங்கட்ராமன் தலைமை தாங்கினா், இதில் வட்டாச்சியா் எஸ் விஜயகுமாா், தலைமையிடத்து வட்டாட்சியர் ரமேஷ், துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி கே வி குப்பம் காவல் ஆய்வாளர் செந்தில்குமாரி பரதராமி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருண் காந்தி அறநிலை துறை செயல் அலுவலர் திருநாவுக்கரசு கிழக்கு வருவாய் ஆய்வாளர் பலராம பாஸ்கர் பரதராமி கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


காலை 5 மணி அளவில் கரகம் கோவிலில் வந்து அடைய வேண்டும் காலை 7 மணி அளவில் அங்கனாபள்ளியில் இருந்து சிரசு கோவிலுக்கு சென்று அடைய வேண்டும், தாய் வீட்டு சீதனம் 11 மணிக்கு கொண்டு வர வேண்டும் அதற்கு காவல்துறை பாதுகாப்பு கொடுத்து உதவ வேண்டும். 12 மணிக்குள் கண் திறக்க வேண்டும், பேனர்கள் வைக்க கூடாது, இரவு 8 மணி முதல் 9 மணி வரை வான வேடிக்கை நடத்த வேண்டும் வான வேடிக்கை நடைபெறும் இடத்தில் கட்டைகள் கட்டி தடுப்பு அமைக்க வேண்டும். அதிக அளவில் மின் விளக்குகள் வெளிச்சம் இருக்க வேண்டும் மேலும் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment