நகர கழகத் துணைச் செயலாளர் - நகர மன்ற உறுப்பினர் ம.மனோஜ் அவர்கள் வரவேற்புரையாற்றினார், குடியேற்றம் நகர நிர்வாகிகள் க.கோ.நெடுஞ்செழியன, ந.ஜம்புலிங்கம், கே.தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் கதிர் ஆனந்த் பேசுகையில் குடியாத்தம் தொகுதி மக்களின் தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக டாக்டர் கலைஞர் அவர்கள் மோர் தானா அணைகட்ட அடிக்கல் நாட்டி அவரே திறந்து வைத்தார். குடியாத்தம் நெல்லூர் பேட்டை சீவூா் ,சேத்துவண்டை வரை சுமாா் ஏப்ரல் கிலோமீட்டர் வரை புறவழி சாலை அமைக்கவும் கெளடண்ய ஆற்றில் சுமாா் 37 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுவதற்கும் குடியாத்தம் அரசு மருத்துவமனை சுமார் 40 கோடி ரூபாயில் புதிய மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினார்.

மக்களைத் தேடி மருத்துவம், மகளிர்காக இலவச பேருந்து வசதி இது போன்ற பல்வேறு நல திட்டங்களை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பேசினார்.
இதில் குடியேற்றம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலு விஜயன், மாவட்டக் கழகத் துணைச் செயலாளர்கள் ஜி.எஸ்.அரசு MC, எஸ்.பாண்டியன், ஒன்றிய பெருந்தலைவர் ஒன்றிய செயலாளர் என் இ சத்யானந்தம், ஒன்றிய கழக செயலாளர் கள்ளூர் கே.ரவி தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் கே.கண்ணன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், கழக முன்னோடிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக நகர மன்ற உறுப்பினர் சி.என்.பாபு நன்றியுரை ஆற்றினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
No comments:
Post a Comment