வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 42 வது வார்டு பகுதியில் குளம் போல் காட்சியளிக்கும் தார் சாலைகள் வாகன ஓட்டிகள் அவதி, வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 42வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை பணி நிறைவடைந்து ஒரு ஆண்டுகள் ஆன நிலையிலும் தற்போது குளம் போல் காட்சியளிக்கிறது வேலூர் மாவட்டம் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் கழிவுநீர் கால்வாய்களை பூமிக்குள் புதைக்கும் பணி நடைபெற்ற வந்த நிலையில் வேலூர் கஸ்பா பகுதியில் குளம் போல் காட்சியளிக்கும் சாலையில் இருசக்கர வாகனங்களோ நான்கு சக்கர வாகனங்களோ செல்ல மிகவும் சிரமத்துக்கு ஆளாகுகிறார்கள்.

சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று செய்திகளை அரசு அதிகாரிகளுக்கும் செய்தித்தாளுக்கும் அனுப்பி எந்த பயனும் இல்லை என்று மிகவும் மன வேதனை அடைகிறார்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைத்து தருமாறு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அரசு அதிகாரிகளுக்கு பலமுறை கடிதம் வாயிலாகவும் தொலைபேசி மூலமாகவும் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை என்று தற்போது வரும் காலங்கள் மழைக் காலங்கள் என்பதால் மிகவும் சேதம் அடையும் என்று நினைவில் கொண்டு உடனடியாக நிறைவேற்று நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்.
No comments:
Post a Comment