வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர் பேட்டை ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நெல்லூர் பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் வள்ளிநாயகி சடையப்பன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் ஊராட்சி செயலாளர் நிர்மல் குமார் ஊராட்சி உறுப்பினர்கள் எழுத்தர் பொதுமக்கள் பங்கேற்றனர்.

அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் கிராமப் பகுதியில் குடிசையில் வசித்து வருபவர்களுக்கு பாரத பிரதமர் மோடியின் திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கன்னிகாபுரம் பகுதியில் குடிநீர் இல்லாத இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றும் ஊராட்சியில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
No comments:
Post a Comment