நாகபட்டினம் துறைமுகம் இந்திய கடற்படை துறைமுகம் இயங்கி வருகின்றது வங்கக்கடல் பகுதியில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதால் போதைப்பொருள் தடுப்பதற்காக நோவல் கேம்ப் அமைக்கப்பட்டுள்ளது. கமாண்டர் முதல் பல்வேறு அதிகாரிகள் இரவும் பகலாக பாதுகாப்பு பணியில் இருந்து வருகிறார்கள். நேற்று இந்திய கடற்படை காவல் காவலர் ராஜேஷ் இரவு 2.00 மணியளவில் இருந்து 4.00 வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் அருகில் இருந்த சக கடற்படை காவலர்கள் வந்து பார்த்தபோது துப்பாக்கியால் சுட்டு இறந்து கிடந்த காட்சியை பார்த்த அனைவரும் அதிர்ந்து போனார். நாகப்பட்டினம் உயர் அதிகாரிகள் விரைந்து சென்று ராஜேஷ் ஆய்வு செய்து வருகின்றனர் எதற்காக இறந்தார் புலனாய்வு செய்து வருகின்றனர். நாகைப்பட்டினம் துறைமுகமே பரபரப்பாக காணப்படுகின்றது.
இந்தியா கடற்படை வீரர் இறந்து இருப்பது மிகப்பெரிய அச்சுறுத்தலையும் மற்றும் அதிர்ச்சியும் எழும்பி இருக்கின்றது அதிகாரியாளர்களால் இவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதா அல்லது குடும்பப் பிரச்சினையால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் மு.பாக்கிராஜ்.
No comments:
Post a Comment