வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டாட்சியர் எஸ் விஜயகுமார் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டாட்சியர் ரகுராமன் வேளாண்மை துறை அலுவலர் உமா சங்கர் குடியாத்தம் நகராட்சி நகரைமைப்பு அலுவலா் சினிவாசன் வட்ட வழங்கல் ,துறை வருவாய் அலுவலா் ஜோதி ராமலிங்கம் ஆகியோா் முண்னிலை வகித்தனா், கூட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.

ஜங்கால் பல்லி அருகே தடுப்பணை கட்டி தர வேண்டும், குரங்குகள் காட்டு பன்றிகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும், ரேடியோ மைதானத்தில் கால்நடை சந்தை அமைக்க வேண்டும், இடி மின்னல் தாக்கிய தென்னை மரத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும், நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும்.
ஜாதி வருமான சான்றுகளை மாணவர்களுக்கு காலதாமதம் இன்றி விரைவாக வழங்க வேண்டும், நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மண்வெட்டி கடைபாறை, கையுறைகள் வழங்க வேண்டும் கோரிக்கைகளை விவாதிக்கப்பட்டது. இதில் வனத்துறை மின்சார துறை நகராட்சி துறை பல்வேறு துறை அதிகாரிகள் விவசாயிகள் பிரதிநிதிகள் சாமிநாதன் துரை செல்வம் மணவாளன் சேகர் மற்றும் பல விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment