வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் பயன்பாட்டிற்கான புதிய நான்கு சக்கரம் வாகனத்தை நேற்று மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் வழங்கினார்.
அதை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு குடியாத்தம் கே வி குப்பம் காட்பாடி கண்ணியம்பாடி பேரணாம்பட்டு ஆகிய ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள புதிய வாகனங்கள் கலெக்டர் அலுவலகத்தில் குமரவேல் பாண்டியன் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களிடம் வழங்கினார் .
இதில் ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குனர் ஆர்த்தி உதவி இயக்குனர் ஊராட்சிகள் ராமகிருஷ்ணன் கலெக்டரின் நேர்முக உதவியாளர் புருஷோத் குமார் ஒன்றிய குழு தலைவர்கள் பாஸ்கரன் சத்யானந்தம் வேல்முருகன் திவ்யா சித்ரா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- வேலூர் தாலுக்கா செய்தியாளர் மு இன்பராஜ்.

No comments:
Post a Comment