கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், A S P பிரசன்ன குமார், A D S P கோடீஸ்வரன், குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் லட்சுமி குடியாத்தம் கிராமிய காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம், குடியாத்தம் போக்குவரத்து ஆய்வாளர் முகேஷ், காட்பாடி போக்குவரத்து ஆய்வாளர் சுந்தரமூர்த்தி உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் சுமார் 1700 போலீசார் ஈடுபட உள்ளனர், குற்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் கண்காணிக்க புரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படும். பொதுமக்களுக்கு சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் பாதுகாப்புகள் வழங்கப்படும், மேலும் திருவிழா நடைபெறும் கெங்கையம்மன் ஆலயம் சிறுசு செல்லக்கூடிய முக்கிய வீதிகளிலும் முத்தாலம்மன் திருக்கோயில்களிலும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment