வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் . - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 18 May 2023

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் .


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில்  விவசாயிகள் குறை தீர்வு இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். நேர்முக உதவியாளர் கலைவாணி வரவேற்றா்.

இதில் துணை ஆட்சியர்  (பயிற்சி) பிரியா வேளாண்மை துறை துணை இயக்குனர் உமா சங்கர்வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை பேரணாம்பட்டு  வனவா் அண்ணாமலை நகரமைப்பு அலுவலா்  சினிவாசன் கேவி குப்பம் துணை வட்டாட்சியர் ஜனனி மோடி குப்பம் சுகாதார அலுவலர் டேவிட் வட்ட வழங்கல் வருவாய் ஆய்வாளர் ஜோதிராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.


குடியாத்தம் காவேரி கூட்டு குடிநீர் வருவதில்லை சமீபகாலமாக உப்பு நீர் விநியோகிக்கப்படுகிறது, நகராட்சி குப்பைகளை உடனுக்குடன் அப்புறப் படுத்துவதில்லை குறிப்பாக சுண்ணாம்பேட்டையில் உள்ள குப்பை குடோனில் அடிக்கடி தீ வைப்பதால் புகை மண்டலமாக மாறி மாசு அடைகிறது அதை கட்டுப்படுத்த வேண்டும் அதேபோல் பழைய ஆணையாளர் கட்டிடம் உழவர் சந்தை பக்கத்தில் உள்ள பூங்கா மாட்டு சந்தை பகத்தில் சமுதாயக்கூடம் குப்பை கூடாரமாக மாறி உள்ளது.



குடியேற்றம் மையப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக அறிவித்து விரிவாக்க கட்டுமான பணிகளை துவங்கிய நிலையில் மக்கள் நலன் கருதி நகராட்சி அலுவலகத்தையும் மக்கள் பயன்பாட்டிற்கு கொடுக்க நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தர வேண்டும். தற்போது  வைரஸ் காய்ச்சல் இரும்பல் சளி என  அதிகமாக பரவி வருகிறது ஆரம்பகால கட்டத்திலேயே நகராட்சி நிர்வாகம் சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


குடியாத்தம் நேதாஜி சவுக்கு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையும் லட்சுமி தியேட்டர் எதிரில் உள்ள டாஸ்மாக் கடை போக்குவரத்து மற்றும் பெண்கள் அச்சமின்றி சென்றுவர ஏதுவாக இரண்டையும் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் அல்லது நகரத்தின் ஓரமாக பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கோடை காலம் வந்து விட்டதால் நிலங்களை நோக்கி வனவிலங்குகள் வருகின்றன இதனை தடுக்க வனத்துறையினர் வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளை உருவாக்க வேண்டும். அரசு மருத்துவமனை எதிரில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு பெரிதும் பாதிப்பாக உள்ளது இதை தடுக்கும் வகைகள் நகராட்சி நிர்வாகம் வாகனங்களை நிறுத்துவதற்கு ஸ்டாண்ட் நிறுவ வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad