கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 20 May 2023

கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம், கல்லப்பாடி  கிராமத்தில்  ஶ்ரீ கெங்கையம்மன்  திருவிழாவை  முண்னிட்டு இன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.

வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கலைவாணி வரவேற்றார். வட்டாட்சியர் விஜயகுமார் துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி கே வி குப்பம் காவல் ஆய்வாளர் செந்தில்குமாரி பரதராமி காவல் உதவி ஆய்வாளர் அருண் காந்தி கல்லப்பாடி ஊா் தா்மகா்த்தா  சரவணன் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் குமுதா தயாள சங்கர் அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர்.



கூட்டத்தில் சிரசு காலை 8 மணி முதல் இரவு 8 மணிக்குள் வெங்கட்டூர் கிராமத்தில் முக்தி வைக்க வேண்டும். திருக்கோவில்  உள்ளே தற்காலிக தர்மகா்த்தா முதல் மாலை  போட  வேண்டும், திருவிழாவுக்கு  வரும் பக்தா்களுக்கு  அடி படை வசதிகள்  செய்து  கொடுக்க  வேண்டும். வானவேடிக்கை நடைபெறும் இடத்தில் சுற்றி பாதுகாப்பு வழங்க வேண்டும் அனுபவம் வாய்ந்த நபர்களை வைத்து வாணவேடிக்கைகள்  மற்றும்  வெடிகள்  வைக்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன். 

No comments:

Post a Comment

Post Top Ad