வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த லத்தேரி ஊராட்சி பகுதியில் கலைஞர் அறக்கட்டளை சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் A.P. நந்தகுமார் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார். கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தது மட்டுமல்லாமல் முதல் ஆளாக தன் கண்ணை மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.

கண் சிகிச்சை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர் . லத்தேரி ஒன்றிய குழுபெரும்தலைவர் L. ரவிச்சந்திரன் ஒன்றிய செயலாளர் K. சீதாராமன் S. முருகேசன் மற்றும் திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கே.வி குப்பம் தாலுகா செய்தியாளர் மு. குபேந்திரன்
No comments:
Post a Comment