ஸ்ரீ கங்கை அம்மன் திருவிழாவை முன்னிட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 3 May 2023

ஸ்ரீ கங்கை அம்மன் திருவிழாவை முன்னிட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருள்மிகு ஶ்ரீ கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் மு. வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கலைவாணி வரவேற்றார். இதில் குடியாத்தம் காவல் துணை கண்காணிப்பாளர் ராமமூர்த்தி வட்டாட்சியர் விஜயகுமார் நகர காவல் ஆய்வாளர் லட்சுமி அறநிலை துறை ஆய்வாளர் திருநாவுக்கரசு கோபாலபுரம் ஊர் நாட்டாமை கங்கையம்மன் கோவில் நிர்வாகிகள் ஆர் ஜி எஸ் சம்பத் ஆர் ஜி எஸ் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.


நகராட்சி சார்பில் திருக்கோவிலை சுற்றி தூய்மை செய்து சுண்ணாம்பு தெளித்து தருவது தேரோட்டம் வரும் வீதிகளில் உள்ள மரக்கிளைகளை  வெட்டி அப்புறப்படுத்துதல் திருக்கோவில் அருகாமையில் உள்ள ஆற்றில் தற்காலிக குடிநீர் குழாய்கள் அமைத்து தருதல் 14 :5 : 2023 தேரோட்டம் நாள் அன்று தவிர்த்து இதர நாட்களில் தடையில்லா மின்சார வழங்குதல் தேரோட்டத்தின் போது உயர் அழுத்த மின்சாரம் தாழ்வழுத்த மின்சார செல்வது தடை செய்தல் வீடுகளுக்கான மின் இணைப்புகளை தேர் செல்வதற்கு முன்பாக பிரித்த பிறகு மீண்டும் தேர் சென்ற பிறகு இணைப்புகள் சரி செய்தல் விழா நாட்களில் தினசரி போதுமான காவலர்கள் திருக்கோயில் அருகே இருக்க செய்தல் தேரின் பின்புற சக்கரங்களுக்கு யாரும் செல்லாமல் பாதுகாப்பு செய்து தருதல் முக்கிய சாலைகளில் திரு கோயிலுக்கு அருகாமையிலும் சிசிடிவி கேமராமைத்து கண்காணிக்க செய்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மேலும் நகராட்சி துறை மின்சார துறை தீயணைப்புத்துறை பொதுப்பணித்துறை மருத்துவ துறை அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad