வேலூர் மாவட்டம் கே வி குப்பம் ஒன்றியம் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக 2 ஆண்டு சாதனை பொதுக்கூட்டம் கே வி குப்பம் லத்தேரி பேருந்து நிலையத்தில் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது .

நிகழ்ச்சியில் ஏ பி நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் . குடும்பத் தலைவருக்கான மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இலவச பேருந்து அமைத்து தரப்பட்டது என்று பல்வேறு சாதனைகளை எடுத்துரைத்தார்.
உடன் கே வி குப்பம் ஒன்றிய பெருந்தலைவர் ரவிச்சந்திரன் ஒன்றிய துணைப் பெரும் தலைவர் பாரதி வெங்கடேசன் மேற்கு ஒன்றிய செயலாளர் சீதாராமன் மற்றும் கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கே வி குப்பம் தாலுகா செய்தியாளர் மு.குபேந்திரன்
No comments:
Post a Comment