வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதுப்பேட்டை சின்ன முதலி தெரு புதிதாக துவங்கியுள்ள யூரோ கிட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் துவக்க விழாவை முன்னிட்டு கார்னிவல் செலிப்ரேஷன் நடைபெற்றது.
இவ்விழாவில் குழந்தைகளுக்கான அறிவியல் விளையாட்டுக்கள் இடம் பெற்றிருந்தன விழாவில் கே எம் ஜி கல்வி நிறுவனங்களின் செயலர் கே எம் ஜி ராஜேந்திரன் அவர்களும் நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் அவர்களும் ஒன்றிய சேர்மன் சத்யானந்தம் அவர்களும் நகர மன்ற உறுப்பினர்கள் அர்ச்சனா நவீன் சங்கர், மனோஜ், மகாலிங்கம் தாட்டிமனப்பள்ளி ஊராட்சி தலைவர் சக்திதாசன் ரோட்டரி சங்க நிர்வாகிகள், கல்வியாளர்கள், பொதுமக்கள், அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். யூரோ கிட்ஸ் பள்ளி தலைவர் பிரதீப் அவர்கள் நன்றி தெரிவித்தார் நிர்வாகிகள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் உடன் இருந்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.


No comments:
Post a Comment