வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா தேவி செட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்த இந்திரகுமார் இவர் அதே பகுதியில் கடந்த ஆண்டு நான்கு ஏக்கர் 84 சென்ட் இடம் ஒன்றை வாங்கி உள்ளார். அந்த இடத்தை தற்போது ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் பிரேம் ஜோதி அவருடைய கணவர் திமுக ஒன்றிய அவை தலைவராக இருந்து வரும் மணிமாறன் என்பவர் இந்திர குமாரை அணுகி இந்த இடம் தனக்கு பத்திரப்பதிவு செய்து தர வேண்டும் என்று தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தார். இந்த நிலையில் தர மறுத்த இந்திரகுமாரை நான் ஆளும் கட்சியில் இருக்கிறேன் என்னை எதிர்த்து உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பது போன்ற தோரணையில் தொடர்ந்து மிரட்டி விடுத்து வந்தார்.


தர மறுத்த இந்திர குமாரை கரடிகுடி இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் வெளியே வந்த அவரை நான்கு பேர் கொண்ட கும்பல் சராசரியாக தாக்கியுள்ளார்கள் தலையில் வெட்டு காயம் ஏற்பட்ட இந்திரகுமார் உடனடியாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இதுகுறித்து வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் மூன்று நாட்கள் ஆகி இதுவரை ஆளுங்கட்சி பிரமுகரான மணிமாறன் என்பவரை அழைத்து விசாரணை கூட செய்யவில்லை என இந்திரகுமார் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் விசாரித்ததில் மணிமாறன் தற்போது தலைமறைவாக இருப்பதாக தகவல் அளித்தனர் திமுக பிரமுகர் கொலைவெறி தாக்குதல் நடத்தி அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என பாதிக்கப்பட்ட இந்திரகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ்
No comments:
Post a Comment