வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்வே நிலையத்தில் ரேஷன் அரிசி கடத்துவதாக புகார் வந்தது புகாரை அடுத்த இன்று காலை 6 மணி அளவில் காட்பாடி ரயில்வே ஐந்தாவது பிளாட்பாரத்தில் திருப்பதி செல்லும் பாசஞ்சர் ரயிலில் ரேஷன் அரிசி கடத்துவதாக வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு வந்த தகவலின் பெயரில் மாவட்ட வருவாய் துறை அலுவலர் உத்தரவின்படி வேலூர் மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் A.C. விநாயகமூர்த்தி மற்றும் ரயில்வே பாதுகாப்பு துறை இணைந்து ரேஷன் அரிசி கடத்துவதை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது திருப்பதி செல்லும் ரயில்களை சோதனை செய்தது இருக்கையில் சிறு சிறு மூட்டைகளாக பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 850 கிலோ ரேஷன் அரிசி திருவலம் உணவு கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் பாக்கியராஜ்


No comments:
Post a Comment