ஐடி ரைட் போல் வந்த கொள்ளை கும்பல் தப்பி ஓட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 28 May 2023

ஐடி ரைட் போல் வந்த கொள்ளை கும்பல் தப்பி ஓட்டம்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல் பட்டி சாலை செருவங்கி அருகே சர்ச் பேராயர் வீட்டில் இன்று ஐடி ரைட் வந்துள்ளதாக 10 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் நுழைந்து மிரட்டியுள்ளனர்.

சுதாரித்துக் கொண்ட பேராயர் அவர்களிடம் ஐடி கார்டு கேட்டுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த கும்பல் பேராயரை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடி உள்ளனர். வீட்டிலிருந்தே அவரது மனைவி பிள்ளைகள்  கூச்சலிட்டனர். கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வருவதற்குள் அந்த கும்பல் காரில் தப்பி ஓடிவிட்டனர் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்து தரும அடி  கொடுத்தனர்.


உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் டவுன் போலீசார் அந்த நபரை மீட்டு குடியாத்தம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தினர் மேலும் அவரிடம் விசாரணை செய்ததில் சென்னை அரும்பாக்கம் குளக்கரை தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் சுரேஷ் (வயது 38) என்பது தெரிய வந்தது மேலும் தப்பி ஓடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.



- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad