வேலூர் மாவட்டம் அடுத்த கஸ்பா இப்ராஹிம் சாயித் தெருவில் தற்போது பாதாள சாக்கடை பணியானது நடைபெற்று வருகிறது, மேலே நீங்கள் படத்தில் காணப்படும் மேனல்கள் யாவும் தரமான முறையில் இல்லாமலும் இப்பொழுதே உடைந்து ஆபத்தான நிலைமையில் இதை எந்த அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.

இதில் சிமென்ட் எவ்வளவு சேர்க்கின்றார்கள் ஜல்லி எவ்வளவு சேர்க்கின்றார்கள் என்பதை எல்லாம் மாநகராட்சி அதிகாரிகள் யாரும் வந்து பார்ப்பதில்லை ஆகவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்து ஆய்வு செய்து தரமான முறையில் பணிகள் நடைபெற ஆணை பிறப்பிக்க வேலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் .ஜா. அமல்ராஜ் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாகவும் சமூக ஆர்வலர்களின் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
அது மட்டுமல்லாமல் அந்தப் பகுதியில் கடைகள் இருப்பதால் தொழிலாளர்களின் நலன் கருதி இரவு நேரங்களில் பணிகளை விரைந்து முடித்து தர அப்பகுதி பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர்
மு .இன்பராஜ்
No comments:
Post a Comment