அதிமுகவின் இளைஞர் இளம் பெண்கள் பாசறை நிர்வாகி இன்று கொடி ஏற்றும் நிகழ்வு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 30 May 2023

அதிமுகவின் இளைஞர் இளம் பெண்கள் பாசறை நிர்வாகி இன்று கொடி ஏற்றும் நிகழ்வு.


வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் SRK.அப்பு புதிய உறுப்பினர் இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகி அஸ்வினியை கொடியேற்ற வைத்தார்.

அதிமுக பொது செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க 27.05.2023 முதல் 31.05.2023 வரை வேலூர் மாநகர மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதி வார்டுகளில், ஒன்றிய ஊரட்சிகளில், பேரூராட்சி வாரியாக உறுப்பினர் சேர்ப்பு  ஆய்வுக் கூட்டம். இன்று காலை 8.30 மணியளவில் சத்துவாச்சாரி வடக்கு பகுதியில் பகுதி செயலாளர் M.A. ஜெய்சங்கர் தலைமையில் 27வது வட்டம் சார்பில் வட்ட செயலாளர் துரைராஜ் ஏற்பாட்டில் வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் SRK.அப்பு பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார்.




நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் சுகன்யா தாஸ், மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் DDR.ரகு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் VL.ராஜன், பகுதி நிர்வாகிகள் G.S.ஆறுமுகம் , முரளி, ஆட்டோ ராஜி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவினை செயலாளர் அறிவரசன் மற்றும்  வட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


- வேலூர் மாவட்ட செய்தியாளர் பாக்கியராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad