அணைக்கட்டு தாலூகா அல்லேறி மலை அடுத்த அத்தி மரத்து கொள்ளை பகுதியில் பாம்பு கடித்து குழந்தை இறந்த விவகாரம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 30 May 2023

அணைக்கட்டு தாலூகா அல்லேறி மலை அடுத்த அத்தி மரத்து கொள்ளை பகுதியில் பாம்பு கடித்து குழந்தை இறந்த விவகாரம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு


அணைக்கட்டு தாலூகா அல்லேறி மலை அடுத்த அத்தி மரத்து கொள்ளை பகுதியில் பாம்பு கடித்து குழந்தை இறந்த விவகாரம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு, மலையின் மீது செல்லும்போது மாவட்ட ஆட்சியரின் கார் கரடு முரடான சாலையில் சிக்கிக்கொண்டது.

அருகில் இருந்த பொதுமக்கள் கற்களை அடுக்கி கொண்டு மாவட்ட ஆட்சியரின் காரை மீட்டி மலைப்பகுதிக்கு எடுத்து வந்தனர், மலைப்பகுதியில் மேலும் கார் செல்ல வழி இல்லாததால் புல்லட் மூலம் பயணித்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் குழந்தையின் பெற்றோரிடத்தில் 25 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது.



வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்காவிற்க்கு உட்பட்ட அல்லேரி மலைப்பகுதியில் அத்திமரத்துக்கொள்ளை கிராமத்தில் 2 தினங்களுக்கு முன் நல்லப்பாம்பு கடித்து குழந்தை இறந்தது. இதனையடுத்து சடலத்தை தூக்கி செல்ல வழியில்லாமல் கால்நடையாக 10 கி.மீ நடந்து சென்றதை பிரபல செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. இதன் எதிரொலியாக இன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய சென்றபோது. பாதி வழியில் கரடு முரடான சாலைகளில் மாவட்ட ஆட்சியரின் கார் செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டது.


இதனால் மேற்கொண்டு காரில் செல்ல முடியாமல் காரில் இருந்து இறங்கினார் மாவட்ட ஆட்சியர் பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் காரைமிட்டு மேலே கொண்டு சென்ற பின்பு மீண்டும் காரில் பயணத்தை தொடர்ந்தார் மேலும் மலைப்பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் புல்லட் வண்டியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவருடன் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை சந்தித்து அவர்களிடன் ரூ. 25 ஆயிரம் காசோலையை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.


பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆட்சியர் சாலை அமைப்பதற்க்கான ஏற்ப்பாடுகள் நடந்து வருகின்றது. விரைவாக அமைக்கப்படும் மேலும் மருத்துவ வசதிகளும் செய்து தரப்ப்படும் என உறுதியளித்தார்.


- வேலூர் மாவட்ட செய்தியாளர் பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad