வேலூர் பேரிப்பேட்டை காளிகாம்பாள் கோவிலில் சிறப்பு பூஜை. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 30 May 2023

வேலூர் பேரிப்பேட்டை காளிகாம்பாள் கோவிலில் சிறப்பு பூஜை.


வேலூர் பேரிபேட்டையில் அமைந்துள்ள விஸ்வகர்ம சமூகத்தினருக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்று ஏழாம் ஆண்டு ஆரம்ப விழா  காலை 8மணி முதல் 12 மணி வரை யாக பூஜையும்,  ஸ்ரீ காளியம்மனுக்கு கலசாபிஷேகமும் நடைபெற்றது.

விஸ்வகர்ம ஜகத்குரு 65 ஆவது குரு மடாதிபதி சிவராஜ ஞானச்சாரிய குருசாமிகள் அருளாசியுடன் ஆலயத்தின் குருக்கள் பிரம்மஸ்ரீ ஜோதி முருகாச்சாரி, தியாகராஜன் குழுவினர் பூஜைகளை செய்தனர். இந்த விழாவிற்கு ஆலய அபிவிருத்தி திருப்பணி டிரஸ்ட் தலைவர் ஜி.முனுசாமி ஆச்சாரி தலைமை தாங்கினார்.   பொருளாளர் ஆர்.ஜீவரத்தினம் துணைத் தலைவர் ஜோதி என்கிற லோகநாதன், மாவட்ட தலைவர் வி.விஸ்வநாதன் மாநில துணைத்தலைவர் எம்.பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கத்தின் தலைவர் சி.தேஜோமூர்த்தி, செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை நிலைய செயலாளர் சு.சோமாஸ்கந்தன் செயற்குழு உறுப்பினர்கள் தி.சு.சக்ரீஸ்வரன் இரா.செந்தில்குமார், கே.ஜி.சண்முகம் ஆச்சாரி  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு பூஜைகள் செய்தனர்.


பூஜைக்கு வருகை தந்த அனைவருக்கும் காளிகாம்பாள் ஆலய குருக்கள் ஜோதி முருகாச்சாரி பிரசாதம் வழங்கினார்.  விழாவில் விஸ்வகர்ம சமூதாயத்தினரும், பக்தகோடிகளும் குடும்ப சமேதராய் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.


- வேலூர் மாவட்ட செய்தியாளர் பாக்கியராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad