இந்த பயிற்சியினை பள்ளிக் கல்வித் துறையுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இந்திய வளர்ச்சி இயக்கம் மற்றும் பரிக்ஷ்ன் ஆகியவை இணைந்து செயலாற்றுகின்றன. இன்று வேலூர் ஒன்றியம் ஊசூர் அடுத்த அரியூர், நம்பி ராஜபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது, .
இன்றைய நிகழ்ச்சிக்கு வேலூர் மாநகராட்சியின் 4ஆவது மண்டலக் குழு தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சா.குமரன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் பா. ராஜேந்திரன் மாவட்ட துணைத் தலைவர்கள் செ.நா.ஜனார்த்தனன் கே.விஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அறிவியல் செய்முறைகளை செய்து காட்டினர்.
இந்த நிகழ்ச்சியில் அறிவியல் சோதனைகள், அறிவியல் அற்புதம், கணக்கும் இனிக்கும், கிராமத்தை அறிவோம், கற்பனையும் கைத்திறனும் மற்றும் பொது விளையாட்டுகள் என்ற தலைப்புகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் க முனுசாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி இப் பயிற்சிகள் நடைபெற்றன, இந்த பயிற்சிகள் மே மாதம் இரண்டாம் தேதி துவங்கி மே 31ஆம் தேதி வரையிலும் அனைத்து ஒன்றியங்களில் அனைத்து ஊராட்சிப் பகுதிகளிலும் நாளொன்றுக்கு ஒரு பகுதி என 30 நாளும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் வானவில் மன்ற கருத்தாளர் ர. அருணா மற்றும் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வ தொண்டர்கள் தீபா, மாலினி, பாரதி, சோனியா மற்றும் லதா ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெறுகிறது. உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளின் ஒத்துழைப்போடு இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் பங்கேற்றனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் மு.பாக்கியராஜ்
No comments:
Post a Comment