லத்தேரி ஊராட்சி பகுதியில் பிரசக்தி பெற்ற காளியம்மன் திருவிழா கோலாகலமாக இன்று நடைபெற்றது. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 3 May 2023

லத்தேரி ஊராட்சி பகுதியில் பிரசக்தி பெற்ற காளியம்மன் திருவிழா கோலாகலமாக இன்று நடைபெற்றது.


வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த லத்தேரி ஊராட்சி பகுதியில் பிரசக்தி பெற்ற காளியம்மன் திருவிழா கோலாகலமாக இன்று நடைபெற்றது, லத்தேரி ஊராட்சி காளியம்மன் கோவில் திருவிழா முன்னதாகவே இரண்டாம் தேதி மாலை 6 மணி அளவில் பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது.

அது மட்டுமில்லாமல் மூன்றாம் தேதி இன்று மாடு விடும் திருவிழா நடைபெற்றது, வேலூர் மாவட்டம் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாடுகள்  போட்டியில் கலந்து கொண்டன  போட்டியில் முதல் பரிசு தொகையாக ரூபாய் 2 லட்சம் அறிவித்திருந்த நிலையில் ஒவ்வொரு மாடுகளும் தலா ஒன்று சுற்றுகள் விடப்படும் அவ்வாறு வீட்டு எந்த காளை குறுகிய நேரத்தில் எல்லைக்கோடு கடக்கின்றதோ  அந்த மாடு வெற்றி பெற்றதாக அறிவிப்பார்கள் இந்த போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டுதில் லத்தேரி அடுத்த தொண்டான் துளசியை சேர்ந்த போர்ரெட்டியார் மாடு வெற்றி பெற்று ரொக்கப் பணமாக ரூபாய் 2 லட்சத்தை தட்டிச் சென்றது. சுற்று வட்டாரத்தில் இருந்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மேல தாளங்களுடன் ஏராளமானோர் கலந்து கொண்டு மாடு விடும் திருவிழாவை சிறப்பித்தனர்.


- கே வி குப்பம் தாலுகா செய்தியாளர் மு.குபேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad