வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மூங்கபட்டு ஊராட்சியில் இன்று மே 23 பொது மருத்துவ முகாம் பல் மற்றும் காசநோய் தடுப்பு விழிப்புனா்வு பரிசோதனைக்ள் நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு மூங்கபட்டு ஊராட்சி மன்ற தலைவா் லதா சுகுமாா் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் குமார் ( எ ) நீலமேகம் சுகன்யா கண்ணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏ சாமிநாதன் வரவேற்றார். இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் கள்ளுாா் ரவி மருத்துவர்கள் இ எஸ் ஐ தலைமை மருத்துவர் டாக்டர் உத்தமன் அரசு மருத்துவர் ஷர்மிளா பி டி எஸ் காச நோய் மருத்துவர்கள் சவரி முத்து டாக்டர் தீபா ஆகியோர் பரிசோதனைகள் செய்தனர்.
இதில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு பரிசோதனைகள் செய்து கொண்டனர். கடைசியாக பொய்ட்ஸ் தொண்ட்டு நிறுவன இயக்குனர் எஸ் திரி வேணி கே.சாமிநாதன் நன்றி கூறினார்.
- குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment