வேலூர் மாவட்டம் குடியாத்தம் மோர்தனா ஊராட்சியில் சூறைக்காற்றால் ஏற்பட்ட பாதிப்பை நேரில் சென்று ஆய்வு செய்த ஒன்றிய பெருந்தலைவர் N.E. சத்யானந்தம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் அடுத்த மோர்தனா ஊராட்சியில் நேற்று கனமழையுடன் சூறாவளி காற்று வீசியதால் வீடுகள் மரங்கள் பயிர்கள் கடுமையான சேதமானதை குடியாத்தம் ஒன்றிய பெருந்தலைவர் N.E. சத்யானந்தம் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன் திருமலை, ஒன்றிய குழு உறுப்பினர் கோதண்டன், ஊராட்சி மன்ற தலைவர் பரந்தாமன், கே வி குப்பம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கே. ராஜ்கமல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment