வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்து சித்தூர் கேட் பகுதியில் இன்று சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்தும் கள்ளச்சாராயம் போலி மதுபான இறப்புகள் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் தொடரும் ஊழல்கள் முறைகேடுகள் கள்ள சாராயம் போலி மதுபானம் இறப்புகள் வழிப்பறி கொலை கொள்ளை சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்து வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் த வேழகன் தலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி ராமு ஒன்றிய கழக செயலாளர் சீனிவாசன் ஆனந்தன் பாபுஜி, மாவட்ட கழக துணை செயலாளர் ஆர் மூர்த்தி அமுதா சிவப்பிரகாசம் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேற்கு ஒன்றிய செயலாளர் டி. சிவா வரவேற்றார். நகர செயலாளர் ஜே கே என் பழனி துவக்க உரையாற்றினார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ் எல் எஸ் வனராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ் எஸ் ரமேஷ் குமார் மாவட்ட கழக பொருளாளர் காடை மூர்த்தி உள்பட பல்வேறு நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment